சீப் பப்ளிசிட்டிக்காக இப்படியா காமிக்கிறது? நடிகையை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.!
அவரை போன்ற ஒருவர் தான் கணவராக வர வேண்டும்... நடிகை திரிஷா ஓபன் டாக்!!

இன்று தமிழ் சினிமாவில் நம்பர் ஒன் நடிகைகளில் ஒருவராக திகழ்பவர் நடிகை திரிஷா. இவர் ரஜினி, விஜய், அஜித், சூர்யா என தமிழ் சினிமாவின் அனைத்து ஹீரோக்களின் படங்களிலும் ஹீரோயினாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி தனி ஒரு நாயகியாகவும் பல வெற்றி படங்களை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து சினிமாவில் கவனம் செலுத்திவரும் த்ரிஷா, தற்போது விளம்பரம், வெப் சீரிஸ் போன்றவற்றிலும் அதிகம் கவனம் செலுத்திவருகிறார். தற்போது 40 வயதாகவும் நடிகை த்ரிஷா, அன்று பார்த்தது போல் இன்று வரை இளம் தோற்றத்துடனையே காட்சியளிக்கிறார்.
இந்நிலையில் தனது திருமணம் குறித்து திரிஷா கொடுத்த போட்டி ஒன்று வைரலாகி வருகிறது. அதில் திருமணம் செய்யும் நபர் நம் மனதிற்கு பிடித்தவராக இருக்க வேண்டும். திருமணத்திற்கு பின் விவாகரத்து செய்வது எனக்கு பிடிக்காது. அப்படி கஷ்டப்பட நான் விரும்பவில்லை என கூறியுள்ளார். மேலும் அஜித்தை எனக்கு மிகவும் பிடிக்கும், அவர் ஒரு ஜென்டில்மேன்.
நல்ல கணவராகவும், அப்பாவாகவும் அவர் இருக்கிறார். அவரை போன்ற ஒருவர் தான் கணவராக வர வேண்டும் என எந்த ஒரு பெண்ணும் விரும்புவாள் என்று கூறியுள்ளார். இது ஒரு பழைய போட்டி என்றாலும் தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது.