மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அட.. சூப்பர் ! இளம் பிக்பாஸ் பிரபலத்துக்கு ஜோடியாகும் அதுல்யா ரவி! உற்சாகத்தில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் மூலம் மக்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். அதனைத் தொடர்ந்து அவர் பியார் பிரேமா காதல் திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அனைவரையும் கவர்ந்தார்.
பின்னர் அவர் இஸ்பெட் ராஜாவும் இதய ராணியும், தாராள பிரபு போன்ற சில திரைப்படங்களில் நடித்தார்
ஹரிஷ் இறுதியாக ஓமணப் பெண்ணே என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானி சங்கர் நடித்திருந்தார். அப்படம் ஓடிடியில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் தற்போது புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை சண்முகம் முத்துசாமி என்பவர் இயக்குகிறார். மேலும் எஸ்பி சினிமாஸ் நிறுவனத்துடன் இணைந்து Third Eye என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படம் ஆக்ஷன் படமாக தயாராக உள்ளது.. இதில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக அதுல்யா ரவி நடிக்க உள்ளார். அதுல்யா சமீபத்தில் சாந்தனு நடிப்பில் வெளிவந்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தில் நடித்துள்ளார்.