மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பின் விக்ரமன் செய்த செயல்... ரசிகர்கள் மகிழ்ச்சி.!
பிக்பாஸ் நிகழ்ச்சி பிரபல தனியார் தொலைக்காட்சியில் 6 சீசனாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. பிக்பாஸ் சீசன் 5 முதல் 16 நபர்கள் மட்டுமே இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி கடந்த அக்டோபர் மாதம் தொடங்கி ஜனவரி மாதம் முடிந்தது. இந்நிகழ்ச்சியில் 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் இறுதிப்போட்டியாளராக அசிம், விக்ரமன், சிவின் ஆகியோர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதில் அசிம் வெற்றி பெற்றார்.
பிக்பாஸ் போட்டியின் முடிவில் விக்ரமன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து புகைப்படம் எடுத்தார். இந்த புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு மகிழ்ந்தார்.
இந்த கமல்ஹாசன் சந்திப்பு குறித்து விக்ரமன் "மதிப்பிற்குரிய அண்ணன் திரு கமல்ஹாசன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து பெற்றேன்" என தெரிவித்துள்ளார். இப்புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அவரை வாழ்த்துவதோடு மட்டுமல்லாமல் ட்ரெண்ட்டாக்கிக்கொண்டு வருகின்றனர்.