மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செம்பருத்தி சீரியலிலிருந்து அதிரடியாக வெளியேறிய கார்த்திக்! புதிய ஆதியாக நடிக்கப்போவது இவர்தானா! வைரலாகும் வீடியோ!
ஜீ தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று டிஆர்பியில் முதல் இடத்தில் வந்து தொலைக்காட்சிக்கே பெருமை சேர்த்து சாதனை படைத்த சீரியல் செம்பருத்தி. இந்த தொடரில் ஹீரோவாக ஆதி என்ற கதாபாத்திரத்தில் ஆபீஸ் சீரியலின் மூலம் பிரபலமான கார்த்திக்கும், ஹீரோயினாக பார்வதி கதாபாத்திரத்தில் சபானாவும் நடித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது 800 எபிசோடுகளை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில் இருந்து நடிகர் கார்த்திக் வெளியேறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆதி கதாபாத்திரத்தில் பல ஆன்லைன் மீடியாக்களில் பிரபலங்களை நேர்காணல் எடுக்கும் பிரபல தொகுப்பாளரான அக்னி நடிக்க உள்ளார். இதுகுறித்து அவரே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
அதில் அவர், ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் செம்பருத்தி தொடரில் முக்கிய கதாபாத்திரமான ஆதிகடவூர் ஆதித்யா கதாபாத்திரத்தில் நான் நடிக்க உள்ளேன். அந்த கேரக்டரை கார்த்திக்ராஜ் மிகவும் சிறப்பாக பண்ணிக்கொண்டு இருந்தார். அதை தற்போது விதி என்னிடம் கொண்டு வந்திருக்கிறது. எனக்கூறி ஜீ தமிழ் மற்றும் செம்பருத்தி டீமுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.