Conjuring Kannappan: கான்ஜுரிங் கண்ணப்பன் படத்தில் யுவனின் இசை உறுதி - அதிகாரபூர்வ அறிவிப்பு.!



Ags Production Conjuring Kannappan Movie Music Director Yuvan Confirmed 


கல்பாத்தி எஸ் அகோரம் ஏஜிஎஸ் என்டேர்டைன்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், செல்வின் ராஜ் சேவியர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் கான்ஜுரிங் கண்ணப்பன் (Conjuring Kannappan). 

ஏஜிஎஸ் நிறுவனத்தின் 24 வது தயாரிப்பு திரைப்படமான கான்ஜுரிங் கண்ணப்பன் படத்திற்கு, யுவன் சங்கர் ராஜா இசையமைப்பு பணிகளை மேற்கொள்கிறார். 

இப்படத்தில் நடிகர்கள் சதீஷ், ரெஜினா கசான்ரா, எல்லி அவிராம், நாசர், சரண்யா பொன்வண்ணன், ஆனந்தராஜ், விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, நமோ நாராயணன் ஆகியோர் நடிக்கின்றனர். 

படத்தின் ஓடிடி வெளியீடு உரிமைகளை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட பணிகள் அனைத்தும் தொடங்கி விறுவிறுப்புடன் நடைபெற்று வருகிறது. 

படம் காமெடி-திரில்லர் கதையம்சத்துடன் உருவாகி வருகிறது.