மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வெறும் 1500 ரூபாய் சம்பளத்திற்கு வேலை பார்த்த நடிகை ஐஸ்வர்யா ராய்.! இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!!
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இருவர் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராய். அதனைத் தொடர்ந்து அவர் ஜீன்ஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், எந்திரன், ராவணன் உள்ளிட்ட பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். ஐஸ்வர்யா ராய் தமிழ், இந்தி பல மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த ஐஸ்வர்யா ராய் பாலிவுட்டின் உச்ச நட்சத்திரமான அமிதாப்பச்சனின் மகனும், நடிகருமான அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஆராத்யா என்ற மகள் உள்ளார். உலக அளவில் பிரபலமாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் நடிக்க வருவதற்கு முன்பு மாடலிங் செய்துள்ளார். அவர் 18 வயதில் பத்திரிக்கை போட்டோஷூட் விளம்பரம் ஒன்றில் நடித்துள்ளார்.
Hello, Yesterday I celebrated the 30th Anniversay of the Fashion Catalogue published by me. Aishwarya Rai, Sonali Bendre, Niki Aneja, Tejaswini Kolhapure were few of the models posed for this Catalogue. pic.twitter.com/AQBuQakv2K
— SGBSR Maharashtra (@Vimalnupadhyaya) May 24, 2022
தற்போது 766 கோடிக்கு சொந்தக்காரியாக இருக்கும் ஐஸ்வர்யா ராய் அந்த பத்திரிகை போட்டோ ஷூட்டிற்காக வெறும் 1500 சம்பளமாக பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. அந்த சம்பள பில் காப்பி தற்போது சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. மேலும் அந்த விளம்பர போட்டோ ஷூட் புகைப்படங்களை கண்ட ரசிகர்கள் அதில் ஐஸ்வர்யா ராய் வித்தியாசமாக இருப்பதாக கூறி வருகின்றனர்.