மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. இவரா! சூப்பர் ஹிட் அந்நியன் படத்தில் முதலில் நடிக்கவிருந்தது யார்னு பார்த்தீங்களா! இப்படி மிஸ் ஆகிருச்சே!!
கடந்த 2005ஆம் ஆண்டு மாபெரும் சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய ஷங்கர் இயக்கத்தில் பெரும் பொருட்செலவில், பிரம்மாண்டமாக உருவாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அந்நியன். இதில் விக்ரம் அம்பி, அந்நியன், ரெமோ என வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை அசர வைத்தார்.
இந்த திரைப்படத்தில் ஹீரோயினாக சதா நடித்திருந்தார். மேலும் அவர்களுடன் விவேக், பிரகாஷ்ராஜ், நாசர், கலாபவன் மணி உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். வித்தியாசமான கதையம்சம் கொண்ட இந்த திரைப்படம் விமர்சன ரீதியாக மட்டுமின்றி, வசூல் ரீதியாகவும் பெரும் சாதனை படைத்தது.
அந்நியன் படத்தில் முதன்முதலில் சதா கதாபாத்திரத்தில் நடக்கவிருந்தது பிரபல நடிகை ஐஸ்வர்யா ராய்தானாம். அப்பொழுது அவரது கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால், அவரால் இப்படத்தில் நடிக்க முடியவில்லையாம். அதனை தொடர்ந்தே அந்நியன் படத்திற்கு நடிகை சதா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.