மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அப்படி நடிக்காதீங்க..செட்டே ஆகல! ஓபனாக கூறிய ரசிகர்! அதற்கு ஐஸ்வர்யா ராஜேஷின் பதிலை பார்த்தீங்களா!!
தமிழ் சினிமாவில் 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ‘அவர்களும் இவர்களும்’ என்ற படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனைத் தொடர்ந்து அவர் அட்டகத்தி, காக்கா முட்டை, தர்மதுரை, குற்றமே தண்டனை, ரம்மி, கனா உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கதைக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களை தேர்ந்தெடுத்து எத்தகைய கதாபாத்திரமாக இருந்தாலும் அதனை ஏற்று அசத்தலாக நடிக்கக் கூடியவர். இவரது படங்கள் அனைத்துமே மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழ் மட்டுமின்றி தெலுங்கு சினிமாவிலும் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் அண்மையில் சமூகவலைத்தள பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடியுள்ளார். அப்பொழுது அவரிடம் ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு மிகவும் கூலாக அவர் பதில் அளித்து இருந்தார். இந்த நிலையில் ரசிகர் ஒருவர் நீங்க ரொம்ப கிளாமரான ரோலில் நடிக்காதீர்கள். அது உங்களுக்கு செட் ஆகலை. தயவுசெய்து அதை அவாய்ட் பண்ணுங்கள் என கூறியுள்ளார். அதற்கு ஐஸ்வர்யா ம்ம்ம்ம் சரி என சிரித்துக்கொண்டே பதில் அளித்துள்ளார்.