#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கொரோனாவிலிருந்து மீண்ட நடிகை ஐஸ்வர்யா ராய், புகைப்படத்துடன் முதன்முதலாக வெளியிட்ட உருக்கமான பதிவு!
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நடிகை ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவரும் கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பியநிலையில், ஐஸ்வர்யா ராய் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலக நாடுகள் முழுவதும் பெருமளவில் பரவி வரும்நிலையில் சாமானிய மக்கள் முதல் அரசியல்வாதிகள், திரைப்பிரபலங்கள் என பலரும் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர். இந்நிலையில் கடந்த 11ம் தேதி பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மற்றும் அவரது மகன் அபிஷேக் பச்சன் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிகிச்சை பெற்று வந்தனர்.
அதனைத் தொடர்ந்து சில நாட்களிலேயே ஐஸ்வர்யா ராய் மற்றும் அவரது மகள் ஆராத்யா இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இருவரும் கொரோனாவிலிருந்து மீண்டு கடந்த 27ஆம் தேதி வீடு திரும்பிர். இந்த நிலையில் தற்போது ஐஸ்வர்யா ராய் தங்களது குடும்பத்தினர்கள் அனைவரும் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தனை செய்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில் தனது குடும்பத்தினர் அனைவரும் நலம் பெற நீங்கள் காட்டிய அன்பு, அக்கறை, பிரார்த்தனை , வாழ்த்துக்கள் அனைத்திற்கும் மிக்க நன்றி. உங்களது அன்பைக் கண்டு மனம் உருகிப் போயுள்ளேன். உண்மையாக அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள். நாங்கள் உங்களுக்கு மிகவும் கடமைப்பட்டு இருக்கிறோம் என்றும் மற்றும் கையெடுத்து வணங்குவது போன்ற புகைப்படத்தை வெளியிட்டு பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.