ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
ஐஸ்வர்யாராயின் முன்னாள் காதலரான சல்மான்கானின் பரபரப்பு பேட்டி.. கோபமடைந்த ஐஸ்வர்யாராயின் கணவர்.?
உலகஅழகி பட்டம் பெற்று 30 வருடங்களான நிலையில் இப்போதும் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு உலக அழகி என்றாலே ஐஸ்வர்யா ராய் தான். சிறந்த நடிப்பு மற்றும் அழகினால் ரசிகர்களின் மனதை கவர்ந்தார். இவர் பல மொழிகளில் திரைப்படங்கள் நடித்து கொண்டிருந்தார்.
மேலும், இவரின் நடிப்பு திறமையால் படவாய்ப்புகள் குவிந்த நிலையில் திடிரென்று அபிஷேக் பச்சனை திருமணம் செய்துகொண்டார். திருமண வாழ்க்கையில் பிஸியாக இருந்த ஐஸ்வர்யா சிறிது காலம் நடிப்பதற்கு பிரேக் எடுத்துகொண்டார். இதன்பின் தற்போது மீண்டும் படங்களில் நடித்து கலக்கி வருகிறார்.
இவர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படம் தற்போது திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதுபோன்ற நிலையில் ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு முன்பு சல்மான் கானை காதலித்து வந்தது அனைவரும் அறிந்ததே.
சமீபத்தில் சல்மான்கான் ஒரு பேட்டியில் அவரது காதலை குறித்து வருத்ததுடன் பேசியிருக்கிறார். அப்பேட்டியில் நான் காதலித்த பெண்கள் அனைவரும் நல்லவர்கள் தான். காதல் முறிவு ஏற்பட்டதற்கு நானே தான் காரணம் என்று மெதுவாக தான் புரிந்துகொண்டேன். தற்போது திருமணம் செய்யும் ஆசை இல்லை. குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும் என்று ஆசை ஆனால் இந்திய சட்டத்தின்படி அது நடக்காது என்று பேட்டியில் வருத்ததுடன் பேசியிருக்கிறார்.