தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
இஸ்லாமிய மதவெறுப்பை தூண்டுகிறாரா ஐஸ்வர்யா ராஜேஷ்.! ஐஸ்வர்யா ராஜேஷ், செல்வ ராகவன் மீது காவல்துறை நடவடிக்கை.?
தமீமும் அன்சாரியும், தவ்ஹீத் ஜமாத் மாநில பொதுச் செயலாளரும் சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்கு சென்று புகாரளித்துள்ளனர் அப்போது அங்கு கூடிய பத்திரிக்கையாளர்கள் அவர்களிடம் பேட்டி எடுத்தனர். அவர் கூறியதாவது, "சமீபத்தில் மத நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையில் சினிமா படங்கள் அதிகம் எடுக்க படுகின்றன. இதுபோன்ற திரைபடங்களை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று புகாரளித்திருக்கிறோம்" என்று கூறினர்.
இதன்படி சில காலமாகவே, அணைத்து மதத்தினரும் நண்பர்களாக இருக்கும் தமிழ் நாட்டில் அவர்களின் ஒற்றுமையை கெடுக்கும் விதமாக இஸ்லாமிய வெறுப்பு ஏற்படுத்தும் விதத்தில் திரைபடங்கள் அதிகமாக வெளிவருகின்றன. இத்தகைய திரைபடங்களை எடுக்கும் இயக்குநர் மற்றும் நடிகர்களின் செயல்பாடு வருத்ததை அளிக்கிறது.
இதுபோன்ற படங்களை எடுப்பதற்கும் இதில் நடிப்பதற்கும் தடைவிதிக்க ஆளும் அரசும், காவல்துறையும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று இஸ்லாமிய சங்கங்கள் சார்பில் கேட்டுகொள்கிறோம் என்று கூறியுள்ளனர்.
சில நாட்களுக்கு முன்பு ஒடிடியில் திரையிடப்பட்ட 'புர்கா' திரைபடம், மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான 'பர்ஹானா' திரைப்படமும் இஸ்லாமிய மதம் சார்ந்தவர்களின் மனதை புண்படுத்தும் விதமாக அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. இஸ்லாமிய மக்களிடம் இந்த திரைபடங்களிற்காக எதிர்ப்புகள் இருந்தபோதிலும் சில தரப்பினர் இப்படத்திற்காக சப்போர்ட் செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.