அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
அட அஜித்தா இது... பொது இடத்தில் ரசிகையுடன் குத்தாட்டம் போட்ட அஜித்... வைரலாகும் வீடியோ!!
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களுள் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். மிகவும் எளிமையாக இருக்கும் அஜித்துக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் உலகம் முழுவதும் உள்ளது. கடைசியாக இவர் நடிப்பில் வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
அடுத்ததாக நடிகர் அஜித் மகிழ் திருமேனி இயக்கத்தில் விடாமுயற்சி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் அஜித் பொதுவாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும், பொது இடங்களிலும் பார்ப்பது என்பது மிகவும் அரிதானது.
ஆனால் அஜித் நியூ இயர் தினத்தன்று வெளிநாட்டு ரசிகையுடன் துணிவு பட பாடலுக்கு நடனம் ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அஜித்தை பொது இடத்தில் இப்படியெல்லாம் பார்த்ததே இல்லையே என ஆச்சரியத்துடன் கமெண்ட் செய்து வருகின்றனர்.
Latest Video of AK Celebrating New Year in Dubai 😍🥳#AjithKumar #VidaaMuyarchi pic.twitter.com/qHH42bm8vb
— Bala Jith (@ThalaBalajith) January 3, 2024