ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
அதிர்ச்சி! கிழித்து தொங்கவிட்ட அஜித் ரசிகர்கள்! தேனியில் பரபரப்பு!

இயக்குனர் சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துள்ள விசுவாசம் படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வீரம், வேதாளம், விவேகம் படங்களை தொடர்ந்து நான்காவது முறையாக தல அஜித் இயக்குனர் சிவாவுடன் கூட்டணி சேர்ந்ததால் விசுவாசம் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. தற்போது அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளது விசுவாசம் படம்.
இந்நிலையில் Youtube , டிவிட்டர், என அணைத்து சமூக வலைத்தளங்களிலும் விசுவாசத்தின் வெற்றியை தல ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதேபோல படமும் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிவிட்டது, திரையரங்குகளில் ரசிகர்களின் அட்டகாசமும் நடக்கிறது.
இப்படி தமிழகமெங்கும் ரசிகர்கள் கொண்டாட்டம் போடுகின்றனர். அதேநேரம் தேனியில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித்தை கொண்டாடும் ஒரு ஆர்வத்தில் ரசிகர்கள் திரையரங்க ஸ்கிரீனையே கிழித்துள்ளனர். இதோ அந்த புகைப்படம்.