மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அஜித் பயன்படுத்திய அந்த பொருளை நல்ல காரியத்திற்காக ஏலத்தில் எடுத்த ரசிகர்! நெகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு!!
ஹெச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது. இதன் டிரைலர் அண்மையில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. இதில் ஏராளமான பைக் சேசிங் காட்சிகள் இடம்பெற்றுள்ளது.
அஜித் நடிப்பு மட்டுமின்றி பைக் ரேசிங், துப்பாக்கி சுடுதல், ஏரோ மாடலிங் துறைப் பேராசிரியர் என பன்முகத்திறமை கொண்டு விளங்கி வருகிறார். மேலும் அவர் தனது பெற்றோர்கள் பெயரில் மோகினி மணி என்ற அறக்கட்டளையையும் நடத்தி வருகிறார். இந்த நிலையில் கைண்ட்னஸ் பவுண்டேஷனுக்காக
பள்ளிக்குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு நடிகர் அஜித்தின் ஆட்டோகிராப் போட்ட கையுறை ஏலத்தில் விடப்பட்டது.
அதனை நடிகர் அஜித்தின் ரசிகரான பெங்களூரைச் சேர்ந்த சூர்யா என்பவர் ஏலத்தில் எடுத்துள்ளார். இதனை அவரே மிகவும் நெகிழ்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் இதுபோன்ற கையுறையை அஜித் வலிமை படத்தில் பயன்படுத்தியுள்ளார். அதனை தான் ட்ரைலரில் பார்த்ததாகவும் அந்த நபர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.