ஷிவ்ராஜ்குமாரின் மிரட்டல் லுக்.. 45 படத்தின் அலறவைக்கும் டீசர்.!
அந்த மனசுதான் சார் கடவுள்.. மாற்றுத்திறனாளி பாட்டியிடம் ஆசீர்வாதம் வாங்கிய தல அஜித்..! வைரலாகும் வீடியோ..!!

கோலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருபவர் நடிகர் அஜித். இவருக்கு அல்டிமேட்ஸ்டார், தல அஜித் என்ற பெயர்களும் உண்டு. ரசிகர்கள் இதுபோன்ற பெயர்களை கூறி பெருமையடைவர்.
மேலும் நடிகர் அஜித் தற்போது துணிவு படத்தில் நடித்துவரும் நிலையில், படப்பிடிப்பை முடித்துவிட்டு ஹைதராபாத்தில் இருந்து சென்னைக்கு திரும்பினார். அப்போது விமான நிலையத்தில் அஜித்தை கண்ட மாற்றுத்திறனாளி ஒருவர் அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார்.
அத்துடன் அங்கிருந்த மாற்றுத்திறனாளி மூதாட்டி அஜித்துடன் பேசியதுடன், அவரது தலையில் கைவைத்து நீ எப்பொழுதும் நன்றாக இருக்க வேண்டும் என்று ஆசீர்வதித்தார். இதுகுறித்த புகைப்படம் மற்றும் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.
பெரியவங்க ஆசீர்வாதம் என்னைக்கும் எங்க அண்ணனுக்கு இருக்கும் 🤗💟 #thunivu #Ajithkumar pic.twitter.com/cABTzkLCRo
— அஜித் ராஜேஷ் ❤️ஆயுட்கால அஜித் விசுவாசி _கோவை (@AjithRa67804408) November 1, 2022