"எனக்கு சினிமாவில் நடிப்பதற்கு சுத்தமாக பிடிக்காது" நடிகை நித்யா மேனன் கூறிய உண்மை....!?
நடிகை ஸ்ரீதேவிக்காக அஜித் எடுத்துள்ள திடீர் முடிவு! சந்தோஷத்தில் தல ரசிகர்கள்!
தல அஜித்துக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளது நாம் அனைவர்க்கும் தெரிந்த விஷயம்தான். ஆனால், அஜித்துக்கு ரசிகர் மன்றமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது விஸ்வாசம் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக போனி கபூர் தயாரிக்கும் பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்கிறார் அஜித்.
பொதுவாக அஜித் எந்தஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்வது இல்லை. தனது படத்தின் இசை வெளியீட்டு விழா, பிரஸ் மீட் இப்படி எதுலயும் கலந்துகொள்வதும் இல்லை. இதனால் அஜித் ரசிகர்கள் அஜித்தை பார்ப்பதே கடினமாக உள்ளது.
இந்நிலையில் எந்த ஒரு பொது நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளாத அஜித் முதன் முறையாக ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள போகிறார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.
ஸ்ரீதேவியின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரும் 24 ஆம் தேதி தினம் இதற்காக சென்னையில் உள்ள தனியார் இடத்தில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளது. இந்த நிகழ்ச்சியில் அஜித் கலந்துகொள்வார் என்று சொல்லப்படுகிறது. அஜித்தின் இந்த திடீர் மனமாற்றத்தால் தல ரசிகர்கள் எல்லையில்லா மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
தல அஜித் மற்றும் ஸ்ரீதேவி இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்ரீதேவி நடித்த இங்கிலிஷ் விங்கிலீஷ் படத்தில் அஜித் சிறு வேடத்தில் நடித்திருந்தார். தற்போது ஸ்ரீதேவிக்கு செய்துகொடுத்த சத்தியத்திற்காக பிங்க் படத்தின் ரீமேக்கில் ஸ்ரீதேவி கணவர் போனி கபூர் தயாரிப்பில் நடிக்கிறார் அஜித்.