மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஹிந்தியில் ரீமேக்காகும் வீரம் படத்தில் திடீர் மாற்றம்! புதிய ஹீரோ யார் தெரியுமா?
தல அஜித், தமன்னா மற்றும் பல்வேறு திரைபிரபலங்கள் நடித்த காமெடி கலந்த ஆக்சன் திரைப்படமான வீரம் கடந்த 2014 ஆம் ஆண்டு தமிழில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. இயக்குநர் சிவா இந்த படத்தினை இயக்கினார்.
அந்த படத்தில் சற்று வயதான மாஸான கேரக்டரில் நடித்தார் தல அஜித். காதல், ஆக்சன் மற்றும் காமெடி என பல்சுவையாக அஜித்தின் ரசிகர்களுக்கு அமைந்தது இந்த படம். அஜித்தின் இடத்தில் வேறு யாரும் நடித்திருந்தால் இந்த அளவிற்கு ஹிட் ஆகியிருக்குமா என்பது சந்தேகமே.
இந்நிலையில் இந்த வீரம் படத்தினை ஹிந்தியில் இயக்குநர் பர்ஹத் ஷம்ஜி 'லேண்ட் ஆப் லுங்கி' என்ற பெயரில் ரீமேக் செய்யப்போவதாக கடந்த மாதம் தகவல்கள் வெளியாகின. ஆரம்பத்தில் அஜித்தின் ரோலில் அக்சய் குமாரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படன.
ஆனால் தற்போது அக்சய் குமார் சூர்யவன்சி, லக்சுமி பாம்ப் போன்ற படங்களில் நடித்து வருவதால் வீரம் ரீமேக்கில் நடிக்க போவதில்லையாம். அவருக்கு பதிலாக ராஷி திரைப்பட புகழ் விக்கி கௌசல், அஜித்தின் வேடத்தில் நடிக்கபோவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
விக்கி 2015 ஆம் ஆண்டு ஹிந்தியில் மசான் என்ற திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து சிறந்த அறிமுக நடிகருக்கான பிலிம்பேர் விருது பெற்றவர். மேலும் சென்ற வருடம் வெளியான ராஷி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார்.