மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ராஜாராணி ஆலியா மானசாவிற்கு குழந்தை பிறந்தாச்சு! என்ன குழந்தை தெரியுமா? வைரலாகும் கியூட் புகைப்படம்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மனதை பெருமளவில் கவர்ந்த ராஜாராணி தொடரில் கார்த்தி மற்றும் செம்பா கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்கள் சஞ்சீவ் மற்றும் ஆலியா. இந்த தொடரில் ஜோடியாக, கணவன் மனைவியாக நடித்து ஏராளமான ரசிகர்களை பெற்ற அவர்கள் நிஜத்திலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஐலா என்ற அழகிய பெண் குழந்தை உள்ளது.
அதனைத் தொடர்ந்து சஞ்சீவ் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்ற தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார். ஆலியாவும் விஜய் டிவியில் ராஜாராணி 2 தொடரில் ஹீரோயினாக நடித்து வந்தார். இந்த நிலையில் இரண்டாவதாக கர்ப்பமாக இருந்த அவர், நிறைமாத கர்ப்பிணியாக இந்த நிலையில் கடந்த சில காலங்களுக்கு முன்பு தொடரில் இருந்து விலகினார்.
இந்த நிலையில் சஞ்சீவ் - ஆல்யா தம்பதியினருக்கு தற்போது இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை சஞ்சீவ் மிகவும் உற்சாகத்துடன் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் மருத்துவமனையில் தனது குழந்தையை கையில் ஏந்திய அழகிய புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவர்களுக்கு வாழ்த்து கூறி வருகின்றனர்.