மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வாடிவாசல் படத்தில் இணைந்த வட சென்னை பட நடிகர்.. வெளியான அசத்தல் அப்டேட்.!
தமிழ் சினிமாவில் பொல்லாதவன் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். இதனைத் தொடர்ந்து இவர் இயக்கிய ஆடுகளம், வடசென்னை, விசாரணை, அசுரன், விடுதலை ஆகிய சூப்பர் ஹிட் படங்களை இயக்கிய தமிழ் சினிமாவின் இயக்குனராக உள்ளார்.
தற்போது இவர் சூரியை வைத்து விடுதலை 2 படத்தை இயக்கி வருகிறார். படத்திற்கு பிறகு நடிகர் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இந்தப் படத்தை கலைப்புலி தானு தயாரிக்க, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இந்தத் திரைப்படம் ஜல்லிக்கட்டு விளையாட்டு மையமாக வைத்து உருவாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற இயக்குனர் வெற்றிமாறன் வாடிவாசல் படத்தின் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி வாடிவாசல் திரைப்படத்தில் இயக்குனர் அமீர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
நடிகர் அமீர் வெற்றிமாறன் இயக்கிய வடசென்னை திரைப்படத்தில் அமீர் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிக்க உள்ளதால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.