96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
நடிகர் அமிதாப்பச்சனுக்கு என்னாச்சு! மருத்துவமனையில் திடீர் அனுமதி! பெரும் கவலையில் ரசிகர்கள்!!
பாலிவுட்டில் ஏராளமான சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்து மெகா ஸ்டாராக கொடிகட்டி பறப்பவர் நடிகர் அமிதாப் பச்சன். இவருக்கு ஏற்கனவே உடல்நலத்தில் பல பிரச்சினைகள் உள்ளது, மேலும் அவரது கல்லீரல் 70 சதவீதம் செயலிலிருந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையிலேயே அமிதாப்பச்சனுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதனை தொடர்ந்து தீவிர சிகிச்சைக்கு பிறகு அதிலிருந்து மீண்ட அவர் தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் தற்போது நடிகர் அமிதாப்பச்சன் திடீரென மும்பை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு மீண்டும் கல்லீரல் பிரச்சினை வந்ததாகவும், அவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாகவும் தகவல்கள் பரவியது.
இதுகுறித்து அமிதாப் பச்சன் தனது டுவிட்டரில் மருத்துவ சிகிச்சை, ஆபரேஷன். இதற்கு மேல் எழுத இயலவில்லை என்ற பதிவிட்டுள்ளார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் பலரும் நடிகர் அமிதாப்பச்சன் விரைவில் நலம் பெற வேண்டும் என பிரார்த்தனை மேற்கொண்டு வருகிறார்கள்.