#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
ஹிப்ஹாப் ஆதியின் அன்பறிவு.! ரிலீஸ் குறித்து வெளிவந்த சூப்பர் தகவல்! என்னனு பார்த்தீங்களா!!
இசையமைப்பாளராக ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமடைந்து பின்னர் 'மீசையை முறுக்கு' திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக களமிறங்கியவர் ஹிப்ஹாப் ஆதி. அதனைத் தொடர்ந்து பல படங்களில் நடித்துள்ள ஆதி தற்போது அன்பறிவு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை அறிமுக இயக்குனர் அஸ்வின் ராம் இயக்கியுள்ளார். இவர் அட்லீயிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர்.
மேலும் அன்பறிவு படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இதில் நெப்போலியன், சசிகுமார், விதார்த், காஷ்மீரா பர்தேஷி, ஆஷா சரத், தீனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மேலும் இப்படத்திற்கு
மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, ஹிப்ஹாப் ஆதியே இசையமைத்துள்ளார்.
Anbai perukki, Arivai vithaithu, kudumbathudan kondaadi magizha, ungalin peraadharavodu namadhu @DisneyPlusHS -il #AnbarivuOnHotstar #DisneyPlusHotstarMultiplex #SambavamStarts@SathyaJyothi_ @actornepoleon @dir_Aswin @madheshmanickam @vidaarth_actor @kashmira_9 pic.twitter.com/FSEPSbuqPW
— Hiphop Tamizha (@hiphoptamizha) December 15, 2021
இந்நிலையில் ஆதி இரட்டை வேடத்தில் நடிக்கும் அன்பறிவு திரைப்படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதனை படக்குழு தனது ட்விட்டர் பக்கத்தில், அன்பைப் பெருக்கி, அறிவை விதைத்து குடும்பத்துடன் கொண்டாடி மகிழ உங்களின் பேராதரவோடு அன்பறிவு நமது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படத்தின் ரிலீஸ் தேதியைப் படக்குழு விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.