பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
அதே லுக்! யாருப்பா இது? பிசாசு 2 படத்தின் பர்ஸ்ட் லுக்கிற்கு பின்னால் இப்படியொரு ரகசியமா!! ஆச்சரியத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவில் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தில் நடித்ததன் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார் நடிகை ஆண்ட்ரியா. அதனை தொடர்ந்து அவர் ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், தரமணி, வடசென்னை உட்பட பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகிவரும் மாஸ்டர் படத்திலும், சுந்தர்.சியின் அரண்மனை 3 படத்திலும் நடிக்கிறார்.
மேலும் ஆண்ட்ரியா மிஸ்கின் இயக்கத்தில் உருவாகும் பிசாசு 2 திரைப்படத்திலும் நடிக்கவுள்ளார். இயக்குனர் மிஷ்கின் கடந்த 2014ஆம் ஆண்டு வெளிவந்த ’பிசாசு’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது பிசாசு 2 படத்தை இயக்குகிறார். இந்த திரைப்படத்தில் நடிகை ஆண்ட்ரியா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில், நடிகை ஆண்ட்ரியா பிறந்தநாளை முன்னிட்டு இயக்குனர் மிஷ்கின் பிசாசு 2 படத்தில் இடம்பெறும் ஆண்ட்ரியாவின் தோற்றத்தை நள்ளிரவு வெளியிட்டு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். இந்த நிலையில் இந்த போஸ்டரில் தான் அணிந்திருக்கும் ஆடை குறித்தும், கெட்டப் குறித்தும் நடிகை ஆண்ட்ரியா சுவாரசியமான தகவல் ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அதாவது நடிகை ஆண்ட்ரியா தனது பாட்டியின் புகைப்படத்தை வெளியிட்டு, மறைந்த தனது பாட்டியின் கெட்டப்பை முன்மாதிரியாக வைத்தே பிசாசு படத்தில் எனது பர்ஸ்ட் லுக் படக்குழுவால் உருவாக்கப்பட்டது என கூறியுள்ளார்.