மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நடிகை ஆண்ட்ரியாவின் அனல் மேலே பனித்துளி.! ரிலீஸ் எப்போ?? இணையத்தை கலக்கும் ட்ரைலர்!!
தமிழ் சினிமாவில் பாடகியாக வலம் வந்து பின்னர் நடிகையாக களமிறங்கி தற்போது பிரபலமான ஹீரோயினாக வலம் வருபவர் நடிகை ஆண்ட்ரியா. அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த புஷ்பா படத்தில் இவர் பாடிய ஊ சொல்றியா மாமா பாடல் சூப்பர் ஹிட்டானது. மேலும் இவரது நடிப்பில் வெளிவந்த படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
ஆண்ட்ரியா நடிப்பில் பிசாசு 2 திரைப்படம் விரைவில் ரிலீசாகவுள்ளது. இதற்கிடையில் தற்போது ஆண்ட்ரியா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் அனல் மேலே பனித்துளி கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த இந்த படத்தை கைசர் ஆனந்து இயக்கியுள்ளார். மேலும் பிரபல இயக்குனர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.
படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் நவம்பர் 18ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகவுள்ளது. இந்த நிலையில் அனல் மேலே பனித்துளி படத்தின் ட்ரைலரை நடிகர் விஜய் சேதுபதி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Happy to share #AnelMeleyPaniThuli Trailer. Streaming from Nov 18th on @SonyLIV. Best wishes team.
— VijaySethupathi (@VijaySethuOffl) November 3, 2022
🔗 https://t.co/W5zYR5xn8d@GrassRootFilmCo #VetriMaaran @THEOFFICIALB4U & #IVYEntertainment @andrea_jeremiah @AnandKaiser @Music_Santhosh @VelrajR @EditorRajan @aadhavkk