மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
உங்களுக்கெல்லாம் தகுதி இருக்கா?? சீண்டிய நெட்டிசன்.! மூக்குடைக்கும் பதிலளித்த ஆண்ட்ரியா!!
தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக திகழ்ந்து பின் பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் ஹீரோயினாக அவதாரமெடுத்து தற்போது முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஆண்ட்ரியா. அவரது நடிப்பில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், தரமணி, வட சென்னை போன்ற படங்கள் செம ஹிட்டானது. நடிகை ஆண்ட்ரியா தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த படங்களில் நடித்து வருகிறார்.
அவரது நடிப்பில் பிசாசு 2, அனல் மேலே பனித்துளி, மாளிகை போன்ற படங்கள் உருவாகியுள்ளது. கைசர் ஆனந்த் இயக்கத்தில், வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகியுள்ள அனல் மேலே பனித்துளி திரைப்படம் வரும் 18ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதன் ட்ரெய்லர் அண்மையில் வெளிவந்தது. இதில், மானம் என்பது எனது உடலிலோ, நான் அணியும் உடையிலோ இல்லை.நாம் வாழும் வாழ்க்கையில் இருக்கிறது என்ற வசனம் இடம்பெற்றிருந்தது.
அதற்கு நெட்டிசன் ஒருவர், ஆண்ட்ரியாவின் காதல் வாழ்க்கையை குறிப்பிட்டு, நீங்க எல்லாம் மானத்தை பத்தி பேசலாமா என கமெண்ட் செய்துள்ளார். அதற்கு ஆண்ட்ரியா பேட்டி ஒன்றில், பாய் ஃப்ரெண்ட் இருந்தால் மானம் இல்லை என அர்த்தமா? இதையெல்லாம் பார்க்கும் போது எனக்கு சிரிப்புதான் வருது. இந்த மாதிரியான ஆட்களுக்காகத்தான், இந்தப் படத்தை எடுத்துள்ளோம். அவர்கள் கண்டிப்பா பார்க்கணும் என நச்சென கூறியுள்ளார்.