மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
எனக்கு கதை பிடித்திருந்தால் போதும் உடனே கால்ஷீட்....
ஒரு படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடிக்கிறார்கள் என்று நினைத்து எந்தப் படத்தையும் தாம் ஒதுக்குவதில்லை என்று கூறுகிறார் நடிகை ஆண்ட்ரியா.
நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘விஸ்வரூபம் 2’. இந்தப் படத்தில் ஆண்ட்ரியா நடித்துள்ளார். இந்தப் படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்தப் படம் பற்றி நடிகை ஆண்ட்ரியா சமீபத்தில் அளித்த பேட்டியில் ‘‘விஸ்வரூபம்’ முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் தான் நான் யார் என்பது ரசிகர்களுக்கு தெரியும். இந்த படத்தில் நடித்தபிறகு எனக்கு சமூக பொறுப்பு அதிகரிதுள்ளது. படங்களில் நடிப்பதற்கு எந்த கண்டிஷனும் நான் போடுவதில்லை. எனக்கு கதை பிடித்திருந்தால் போதும் உடனே கால்ஷீட் கொடுத்துவிடுவேன்.
‘விஸ்வரூபம் 2’வும், ‘வடசென்னை’யும் இரண்டு படங்களும் வெளியாகவுள்ளது. இந்த இரு படங்களிலும் இரண்டு நடிகைகள் நடித்துள்ளனர். இரண்டு நடிகைகள் என்று எந்த படத்தையும் நான் ஒதுக்குவதில்லை. கதையில் எனக்கான முக்கியத்துவத்தை மட்டும் பார்க்கிறேன்’’ என்றார் நடிகை ஆண்ட்ரியா.