மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அந்த "டி" இல்லாம நான் இல்லை.. மனம் திறந்து உண்மையை உடைத்த அனிருத்..! நெகிழ்ந்துபோன ரசிகர்கள்..!!
இயக்குனர் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் திருச்சிற்றம்பலம். இந்த படத்தில் ப்ரியா பவானி சங்கர், ராஷிகண்ணா, நித்யா மேனன், பாரதிராஜா மற்றும் பிரகாஷ்ராஜ் போன்றோர் நடித்துள்ளனர்.
கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு தனுஷ் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். தற்போது இப்படத்தின் இறுதி கட்டத் தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வரும் நிலையில், வரும் ஆகஸ்ட் 18ம் தேதி படம் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
நேற்று சென்னையில் இப்படத்தின் பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா தனியார் கல்லூரியில் நடைபெற்றது. அப்போது நிகழ்ச்சியில் வெற்றிமாறன் உள்ளிட்ட பல பிரபலங்களும் கலந்து கொண்டனர். இதில் பேசிய அனிருத் டிஎன்ஏ கூட்டணியில் உருவாகியுள்ள திருச்சிற்றம்பலம் பாடலுக்கு ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு கொடுத்ததுள்ளதாகவும், "அந்த டி(தனுஷ்) இல்லனா இந்த ஏ(அனிருத்) இல்லை" என்று தனுஷை குறிப்பிட்டு பேசியிருக்கிறார். இந்த வீடியோ வைரலாகி இருக்கிறது.