#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கணவரை விவாகரத்து செய்கிறாரா பிக்பாஸ் அனிதா! என்ன கடைசியில இப்படி இறங்கிட்டாங்களே!!
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் அனிதா சம்பத். இவர் வெள்ளித்திரையிலும் சர்க்கார், காலா, காப்பான் போன்ற திரைப்படங்களில் சிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிதா வெளிப்படையாக, பட்டென நேரடியாக தனது கருத்தை தெரிவித்து ஏராளமான விமர்சனங்களை சந்தித்துள்ளார். அனிதா சம்பத்தின் கணவர் பிரபாகரன். அனிதா கணவர் மீது மிகுந்த அன்பு கொண்டவர். பிக்பாஸ் நிகழ்ச்சியிலேயே பலமுறை அவரைப்பற்றி பேசியுள்ளார்.
இந்நிலையில் தற்போது அனிதா சம்பத் தனது கணவரை விவாகரத்து செய்யப்போவதாக இணையதளம் ஒன்றில் செய்தி வெளியாகியுள்ளது. இதுகுறித்து விளக்கமளித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், இது எப்போ? கன்டென்ட் எதுவும் இல்லனு இந்த லெவலுக்கு இறங்கிட்டாங்களா கிசுகிசு பக்கங்கள்? டெய்லி யூடியூப்ல என் புருஷனோட வீடியோ போடுறதெல்லாம் அட்மின் பாக்குறதில்ல போல என கிண்டலாக கூறியுள்ளார்.