#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
முடிஞ்சா அதை உன் அம்மாகிட்ட காட்டு! செம கடுப்பாகி அனிதா சம்பத் வெளியிட்ட புகைப்படம்!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்துகொண்டவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளரும், நடிகையுமான அவர் எல்லா டாஸ்க்குகளையும் சிறப்பாக செய்து பைனல்ஸ் வரை செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அழுவது, சண்டை போடுவது என ரசிகர்களின் விமர்சனத்துக்கு உள்ளாகி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.
அவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய சில நாட்களிலேயே, அனிதாவின் அப்பா உயிரிழந்தார். அதனால் அவர் மிகவும் மனம் உடைந்து போனார். அதனைத் தொடர்ந்து அனிதா சம்பத் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் கலந்து கலந்து கொண்டார். சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் அவர் அப்போது தனது ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.
இந்தநிலையில் அண்மையில் இளைஞரொருவர் அனிதா சம்பத்திற்கு மோசமாக திட்டி மெசேஜ் அனுப்பியுள்ளார். இந்நிலையில் அந்த இளைஞரின் புகைப்படத்தை ஷேர் செய்த அனிதா பெண்களே இவனை சந்தித்தால் கவனமாக இருங்கள். வருங்கால ரேபிஸ்ட். நீ டைப் செய்ததை முடிந்தால் உன் அம்மாவிடம் காட்டு. அவர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்.