#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பட சான்ஸ் தருவதாக கூறி தவறான உறவுக்கு அழைத்த நபர்! போட்டுடைத்து வெளுத்து வாங்கிய அனிதா சம்பத்!!
சன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்து மக்கள் மத்தியில் நன்கு பிரபலமானவர் அனிதா சம்பத்.அவர் வெள்ளித்திரையிலும் கால்பதித்து சர்க்கார், காலா, காப்பான் போன்ற திரைப்படங்களில் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
அங்கு அவர் மிகவும் வெளிப்படையாக, பட்டென தனது கருத்தை தெரிவித்து ஏராளமான விமர்சனங்களை சந்தித்தார். மேலும் அவருக்கு ஆதரவாகவும் பலரும் கருத்து தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது அனிதா சம்பத் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் ஷாரிக் உடன் இணைந்து நடனமாடி வருகிறார்.
இதற்கிடையே சமீபத்தில் இளம்பெண் ஒருவருக்கு நபர் ஒருவர் நடிப்பதற்கு வாய்ப்பு தருவதாகக் கூறி, தவறான விஷயத்திற்கு அழைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் அந்த நபர் அனுப்பிய குறுஞ்செய்தியை, அனிதாவிற்கு அந்தப் பெண் பகிர்ந்துள்ளார். இதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்த அனிதா சம்பத், 'தோழி ஒருவர் இந்த ஸ்கிரீன் ஷாட்டை அனுப்பினார். தயவு செய்து இந்த மாதிரி ஆட்களை நம்பாதீர்கள்' எனக் குறிப்பிட்டுள்ளார்.