#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அந்த விஷயத்திற்காக மகனை மேடையிலேயே கண்டித்த ஏ ஆர் ரகுமான்.. என்ன காரணம் தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிஸியான இசையமைப்பாளராக வலம் வரும் ஏ ஆர் ரஹ்மான் அவ்வப்போது இசை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். இவர் பெரும்பாலும் வெளிநாடுகளில் தான் நிகழ்ச்சிகளை நடத்துவார். ஆனால், இம்முறை தமிழ்நாட்டில் "மறக்குமா நெஞ்சம்.." என்ற பெயரில் இசைநிகழ்ச்சியை நடத்தி வருகிறார்.
சமீபத்தில் கோவையில் நடைபெற்ற இசை நிகழ்ச்சியில், ஏ. ஆர். ரஹ்மான் தன்னுடைய மகன் அமீனுடன் கலந்து கொண்டார். அப்போது மேடையில் வைத்து தன் மகனை கலாய்த்த சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
மேடையில் ஏ. ஆர். ரஹ்மான் தனது மகனிடம், " பயமா இருக்கா? பொண்ணுங்கலாம் பாக்கிறாங்க." என்று கூறினார் இதன்பிறகு பேச தொடங்கிய அமீன் ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்தார். இதனை ஏ.ஆர் ரஹ்மான் செல்லமாக கண்டித்து தமிழ்ல பேசு.." என்று கூறினார்.
முன்னதாக, சென்னையில் ஆகஸ்ட் 12ம் தேதி நடைபெறவிருந்த இசை நிகழ்ச்சி கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டு, மீண்டும் செப்டம்பர் 10ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.