மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மிக்ஜாம் புயல்.! அனைவரையும் நெகிழ வைத்த அறந்தாங்கி நிஷா.!
வங்க கடலில் சமீபத்தில் உருவான மிக்ஜாம் புயல் காரணமாக, பெய்த மழையால் சென்னையை சுற்றியுள்ள பல மாவட்டங்களிலுள்ள மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார்கள். அதோடு தலைநகர் சென்னையிலிருக்கின்ற பல்வேறு பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்து விட்டது. இதன் காரணமாக, தமிழக அரசின் சார்பாக மீட்பு பணிகள் தீவிர படுத்தப்பட்டு, வெள்ளநீர் உடனடியாக வெளியேற்றப்பட்டது. ஆனாலும் ஒரு சில பகுதிகளில் வெள்ள நீர் முழுமையாக வெளியேற 4 நாட்கள் தேவைப்பட்டது. வெள்ள நீர் வீடுகளை சூழ்ந்ததன் காரணமாக, பல்வேறு பகுதியைச் சேர்ந்த மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமல் தவித்து வந்தனர்.
சென்னை மக்களின் பரிதாபத்தை கண்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், திரைத்துறை பிரபலங்களும், தன்னார்வ நிறுவனங்களும் சென்னையை சேர்ந்த மக்களுக்கு நிவாரண உதவிகளை மேற்கொண்டு வந்தனர். அந்த வகையில், சென்னையை சேர்ந்த மக்களுக்கு சின்னத்திரை பிரபலமான அறந்தாங்கி நிஷா பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். இதுகுறித்த வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
அறந்தாங்கி நிஷா நிவாரண பொருட்களை வழங்கியதோடு நின்று விடாமல், அவர் செய்த ஒரு செயல் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியிருக்கிறது. மேலும் இது தொடர்பாக மக்கள் அனைவரும் அவரை வெகுவாக பாராட்டி வருகின்றனர். பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று அங்குள்ள மக்களுக்கு தேவையான உதவிகளை செய்த அறந்தாங்கி நிஷா, அந்தப் பகுதியை சார்ந்த குழந்தைகளிடம் படிப்பு தான் முக்கியம் என்று கூறியிருக்கிறார்.
நிவாரண பொருட்களை வழங்கி முடித்தவுடன், குழந்தைகளிடம் பேசிய அறந்தாங்கி நிஷா, "மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உங்களுக்கு உதவ நாங்கள் இங்கே வந்தபோது நிறைய பேர் எங்களிடம் கேட்டது புத்தகங்கள், புத்தகப்பை, லஞ்ச் பேக் போன்றவை தான் இதிலிருந்தே இங்கு நிறைய பேர் படிக்க ஆர்வமாக இருப்பது தெரிகிறது. உங்க அப்பா, அம்மா எல்லாம் திருஷ்டி கயிறு, திருஷ்டி பொம்மைகள் தயாரித்து விற்பனை செய்யுறாங்க ஒவ்வொரு பொம்மையையும் விற்க அவங்க அவ்வளவு கஷ்டப்படுறாங்க.
அப்படி பொம்மை விற்பது உங்களை படிக்க வைப்பதற்கு தான். படிப்பு ரொம்ப முக்கியம், நம்மை போன்ற மக்களுக்கு படிப்பு ரொம்ப முக்கியம் தங்கம், நீங்க எல்லாரும் நல்லா படிக்கணும், நல்லா படிச்சு, உலகமே உங்க மேல திருஷ்டி படுற மாதிரி வரணும். வெள்ளத்தில் கார், பணம் எல்லாம் போச்சு ஆனா படிப்பு மட்டும் நம்மை விட்டு போகாது என்று அவர் தெரிவித்திருக்கிறார்.