திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கைதி 2 கதை என்ன?.. அர்ஜுன் தாஸின் அசத்தல் பதில்.!
கடந்த 2019 ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சாம் சிஎஸ் இசையில், ரூ.25 கோடி செலவில் உருவாகிய திரைப்படம் கைதி. இப்படத்தில் நடிகர்கள் கார்த்திக், நரேன், அர்ஜுன் தாஸ், ஜியார்ஜ் மரியான், தீனா, அம்ஜித் உட்பட பலரும் நடித்திருந்தனர்.
கைதி திரைப்படம்:
மாநகரம் திரைப்படத்திற்கு பின்னர் கைதியின் வாயிலாக இந்திய திரைஉலகையே திரும்பி பார்க்க வைத்த லோகேஷ் கனகராஜ், தற்போது தமிழில் முக்கிய இயக்குனர்களில் ஒருவராகவும் இருக்கிறார். நடிகர் விஜயுடன் மாஸ்டர், லியோ ஆகிய படத்திலும் இணைந்து பணியாற்றி இருக்கிறார்.
கைதி படத்தின் முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து, அதன் இரண்டாவது பாகமும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான பணிகள் விரைவில் தொடங்கும் என திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கைதி 2 படம் குறித்து:
இந்நிலையில், கைதி 2 படம் குறித்து அர்ஜுன் தாஸ் கூறுகையில், "டில்லி எதற்காக சிறைக்கு சென்றார்? அடைக்கலம் யார்? என்பது தொடர்பான கதை கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் இருக்கும். அதனை படம் வெளியான பின்பு திரையரங்கில் வந்து பார்த்துச்செல்லுங்கள்" என கூறினார்.