அட ..இது சூப்பராச்சே.! தளபதி 67 படத்தில் இணைந்துள்ள மாஸ் பிரபலங்கள்.! யார்னு பார்த்தீங்களா!!



Arjun,sanjay dutt join in thalapathy 67 movie

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் தளபதி விஜய் பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து தற்போது வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்குகிறார். இதில் ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடித்துள்ளார்.

வாரிசு திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக உள்ளது அதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளாராம். தளபதியின் 67வது படமான அது கேங்ஸ்டர் கதையமைப்பில் உருவாக உள்ளது. இதில் ஹீரோயினாக நடிகை திரிஷா நடிக்கவிருப்பதாக தகவல்கள் பரவியது.

Arjun

மேலும் அப்படத்தில் விஜய் 50 வயது தாதா ரோலில் நடிப்பதாகவும், அவருக்கு வில்லனாக ஆறு பிரபல முன்னணி நடிகர்கள் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்தது. இந்த நிலையில் தளபதி 67 படத்தில் விஷால் வில்லனாக நடிக்கவிருப்பதாக கூறப்பட்டதை தொடர்ந்து தற்போது சஞ்சய் தத் மற்றும் ஆக்சன் கிங் அர்ஜுன் ஆகியோரும் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.