96 பட குட்டி ஜானு.. பயங்கரமான வளர்ச்சியா இருக்கே.?! சமீபத்திய போட்டோ.. கிறங்கிப்போன ரசிகர்கள்.!
அந்த மாதிரி காட்சிக்கு நோ.! சும்மா அப்படியெல்லாம் நடிக்கமாட்டேன்! நடிகர் அருள்நிதி அதிரடி கண்டிஷன்!!
தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளிவந்த ''வம்சம்' படத்தில் நடித்ததன் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் அருள்நிதி. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அவர் உதயன், மௌனகுரு, தகராறு, டிமான்டி காலனி, பிருந்தாவனம், டி பிளாக் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவற்றில் சில படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
அருள்நிதி தற்போது டைரி என்ற படத்தில் நடித்துள்ளார். இந்தப் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. டைரி படத்தை
பைஸ்டார் கிரேஷன்ஸ் சார்பாக, கதிரேசன் தயாரிக்க, இன்னாசி பாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார். இப்படத்தில் கிஷோர், ஜெ.பி, ஷாரா, பவித்ரா மாரிமுத்து உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று டைரி படக்குழு செய்தியாளர்களை சந்தித்துள்ளனர். அப்பொழுது அருள்நிதியிடம், புகைபிடிக்கும் காட்சிகள், மது அருந்தும் காட்சிகளில் நடிப்பது குறித்து கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர், தேவையில்லாமல், ஸ்டைலுக்காக புகைபிடிப்பது அல்லது மது அருந்துவது போன்ற காட்சிகளை நான் ஆதரிப்பதில்லை. எனது படங்களில் அந்த மாதிரி காட்சிகளில் நடிப்பதை நான் தவிர்த்து வருகிறேன். ஆறாது சினம் படத்தில் புகைபிடிப்பது, மது அருந்துவது போல நடித்திருப்பேன். ஏனெனில் அந்த சீன் கதைக்கு மிகவும் தேவையாக இருந்ததால் அப்படி நடித்தேன் எனக் கூறியுள்ளார்.