"நடிகர் ஆர்யா மற்றும் சாயிஷாவின் வைரலாகும் குடும்பப் புகைப்படங்கள்!"



arya-and-saysha-family-photos-viral

2015ம் ஆண்டு தெலுங்குத் திரைப்படமான "அகில்" திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானவர் சயீஷா. அந்தப் படத்திற்காக இவர் சிறந்த அறிமுக நடிகைக்கான சிமா விருதைப் பெற்றுள்ளார். தொடர்ந்து 2016ம் ஆண்டு ஹிந்தியில் "ஷிவாய்" படத்தில் அறிமுகமானார்.

Arya

மேலும் 2017ம் ஆண்டு தமிழில் "வனமகன்" திரைப்படத்தில் அறிமுகமானார். இதையடுத்து கடைக்குட்டி சிங்கம், ஜுங்கா, கஜினிகாந்த், காப்பான், டெடிடிடி, யுவரத்னா, பத்துதல ஆகிய படங்களில் நடித்துள்ளார். நடிகர் ஆர்யாவுடன் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்துகொண்டார்.

ஹைதராபாதில் இஸ்லாமிய முறைப்படி ஆர்யா மற்றும் சாயீஷா திருமணம் நடைபெற்றது. தற்போது இவர்களுக்கு இரண்டரை வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. சமுக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சாயீஷா அவ்வப்போது தன் குடும்பப் புகைப்படங்களை பதிவிடுவார்.

Arya

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் ஆர்யா மற்றும் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும், தன் அம்மாவுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.