திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திடீரென பாக்கியலட்சுமி சீரியலிருந்து வெளியேறிய நடிகர்... காரணம் என்ன தெரியுமா.?
விஜய் தொலைக்காட்சியில் வித்தியாசமான கதைக்களத்துடன், ஏராளமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அவ்வாறு ஒளிபரப்பாகி குடும்ப பெண்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று வரும் தொடர் பாக்கியலட்சுமி. ஒரு சாதாரண குடும்பத் தலைவி குடும்பத்தை கவனித்துக்கொண்டு, தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்க போராடுவதை மையமாக கொண்டு இத்தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
பாக்கியலட்சுமி தொடர் தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டுள்ளது. தற்போது பாக்கியாவை விவாகரத்து செய்து விட்டு ராதிகாவை திருமணம் செய்ய இருக்கும் கோபியின் செயல் எப்போது குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தெரிய வரும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது.
இந்நிலையில் தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் செழியன் கதாபாத்திரத்தில் நடித்த ஆர்யன் திடீரென சீரியலிருந்து வெளியேறுவதாக தகவல் வெளியாகியுள்ளது. சில தவிர்க்க முடியாத காரணங்களால் சீரியலிருந்து ஆர்யன் வெளியேறுவதாக தகவல் பரவி வருகிறது.