மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பிக் பாஸ் வீட்டிற்கு வெளியேவும் அசிம், விக்ரமன் மோதலா...! அசிமை ஒதுக்கிய பிக்பாஸ் போட்டியாளர்கள்..!?
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட ரியாலிட்டி நிகழ்ச்சி தான் பிக்பாஸ். ஆறு சீசனாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் ஆறாவது சீசன் கடந்த வருடம் அக்டோபர் மாதம் ஆரம்பிக்கப்பட்டது. எல்லா பிக் பாஸ் சீசனை போலவும் கமல்ஹாசனை இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
மேலும் 21 போட்டியாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். வழக்கம் போலவே இதற்கு முந்தைய சீசனைப் போன்று இந்த சீசனிலும் சண்டை சச்சரவிற்கு குறைவு இல்லை. இந்த சீசனில் இறுதிப்போட்டியாளர்களாக அசிம், விக்ரமன், ஷிவின் ஆகியோர் இருந்தனர்.
இதையடுத்து அசிம் பைனலிஸ்ட்டாக முடிவான நிலையில், வாக்களித்த மக்களுக்கு இந்த முடிவில் திருப்தி இல்லை என்று தான் கூற வேண்டும். பலரும் எதிர் மறையாக இந்த முடிவிற்கு கருத்து தெரிவித்து வந்தனர். வாய் சண்டையால் மட்டுமே அசிம் பிரபலமாகி இந்த போட்டியில் வெற்றி பெற்றதாக கூறி வந்தனர்.
இத்தகைய நிலையில், பிக் பாஸ் சீசன்6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள், அனைவரும் ஒரே இடத்தில் ஒன்று கூடி இருந்தனர். முன்னதாக பிக் பாஸ் வீட்டில் இருந்தபோது இலவச சட்ட உதவி மையம் அமைக்க போவதாக விக்ரமன் சொல்லி இருந்தார். அதற்காகவே பிக்பாஸ் பிரபலங்கள் ஒன்று கூடியதாக தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இந்த சந்திப்பில் அசிம், தனலட்சுமி இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.