மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
அதர்வாவின் மத்தகம் வெப் தொடர் நாளை ரிலீஸ்.. எதில் தெரியுமா?
அதர்வா நடித்துள்ள மத்தகம் வெப் தொடர் நாளை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருப்பவர் அதர்வா. கிராமத்து கதைகளில் கச்சிதமாக நடித்து ரசிகர்களுடையே பிரபலமானவர். இந்த நிலையில் பிரசாத் முருகேசன் இயக்கத்தில் 'மத்தகம்' என்ற வெப் தொடரில் நடித்துள்ளார்.
இந்த வெப் தொடரில் அதர்வா, கௌதம் மேனன், நிகிலா விமல், இளவரசு, மணிகண்டன், திவ்யதர்ஷினி என பலர் நடித்துள்ளனர். இதில் மணிகண்டன் வில்லனாக நடித்துள்ளார்.
க்ரைம் த்ரில்லராக எடுக்கப்பட்டுள்ள இந்த வெப் தொடர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, மராத்தி, பெங்காலி ஆகிய 7 மொழிகளில் நாளை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் வெளியாகிறது.