மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இதயம் உடைந்துவிட்டது! இயக்குனர் அட்லீ- பிரியா வீட்டில் நேர்ந்த துயரம்! வேதனையுடன் வெளியிட்ட பதிவு!
தமிழ் திரையுலகில் வெற்றி படங்களை இயக்கி பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் அட்லீ. அவர் கனா காணும் காலங்கள் உள்ளிட்ட பல சீரியல்களிலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை பிரியாவை கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் பிரியாவின் தாத்தா கலியராஜ் என்பவர் காலமானார்.
இந்நிலையில் இதுகுறித்து அட்லீ தனது ட்விட்டர் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பிரியாவின் தாத்தா இன்று காலமாகிவிட்டார். அவரை தாத்தா என்று அழைப்பது அவருக்கு பிடிக்காது. அதனால் நான் அவரை எப்பொழுதும் ப்ரோ என்றுதான் அழைப்பேன். அவருக்கு 82 வயது. மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.
கடந்த வாரம் கூட நாங்கள் நன்றாக பேசினோம். அவருக்கு என்னை மிகவும் பிடிக்கும் எனது நல் விரும்பியாக, ஒரு நண்பனாக என்னை வழிநடத்தினார்.நீங்கள் தற்போது உயிருடன் இல்லை என்பதை என்னால் நம்பமுடியவில்லை ப்ரோ. இதயம் உடைந்துவிட்டது என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.