பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
ஒருவழியாக ஓடிடியில் வெளியாகிறது இயக்குனர் பாலாவின் வர்மா! எப்போ தெரியுமா? வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு!
தெலுங்கில் வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படம் அர்ஜுன் ரெட்டி. அதனை தமிழில் ரீமேக் செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் முதலில் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் பாலா இப்படத்தை இயக்கினார்.
படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் வர்மா படம் எதிர்பார்த்த அளவிற்கு வரவில்லை என தயாரிப்பு நிறுவனம் படத்தை வெளியிடுவதை கைவிடுவதாக அறிவித்தது. பின்னர் அப்படம் கிரிசாயா இயக்கத்தில் துருவ் விக்ரம், பனிட்டா சந்து, ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் ஆதித்ய வர்மா என்ற பெயரில் வெளியானது. மேலும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
Get ready to watch Director Bala's much-awaited #Varmaa
— Simply South (@SimplySouthApp) October 1, 2020
World premiere on 6th October, exclusively only on Simply South!@E4Emovies @e4echennai #DirectorBala #DhruvVikram #MeghanaChowdary @raizawilson @radhanmusic #IdhuVeraLevelEntertainment #SayNoToPiracy #VarmaaOnSimplySouth pic.twitter.com/5YrhNoXOjr
இந்நிலையில் பாலா இயக்கத்தில் உருவான வர்மா திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளிவரவிருப்பதாக சமீப காலமாக தகவல்கள் பரவி வந்த நிலையில், தற்போது அக்டோபர் 6-ம் தேதி வர்மா திரைப்படம் சிம்பிளி செளத் என்ற தளத்தில் ரிலீசாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. இந்நிலையில் பாலா ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர்