திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
தந்தையும் தற்கொலை, மகளும் தற்கொலை.! என்ன பிரச்சனை? சர்ச்சையை கிளப்பிய பயில்வான் ரங்கநாதன்.?
இசையமைப்பாளரும், இயக்குனரும், நடிகருமான விஜய் ஆண்டனி சினிமாவில் கூட அதிர்ந்து பேசாதவர். நேற்று அதிகாலை இவரது 16 வயது மகள் மீரா, வீட்டில் அவரது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இது குறித்துப் பேசிய பயில்வான் ரங்கநாதன், " விஜய் ஆண்டனியின் மனைவியை எனக்கு முன்பே தெரியும். இவர்களுடையது பெற்றோர் சம்மதத்துடன் நடந்த காதல் திருமணம். அவர்களது குடும்பமே எனக்கு ரொம்ப நெருக்கமானது.
12ம் வகுப்பு படிக்கும் பெண்ணுக்கு இப்படி ஒரு நிலையா என்று அதிர்ச்சியாக இருக்கிறது. இவர் கடந்த ஓராண்டாக மன உளைச்சலுக்கு சிகிச்சை பெற்று வந்ததாகத் தெரிகிறது. விஜய் ஆண்டனியின் அப்பாவும் தற்கொலை செய்து கொண்டு தான் இறந்துள்ளார்.
இதுகுறித்து விஜய் ஆண்டனியே ஒரு முறை கூறியுள்ளார். "என் தந்தை தற்கொலை செய்துகொண்ட பின், என் தாய் எங்களை வளர்க்க ரொம்ப சிரமப்பட்டார். அதனாலே என் தாய்க்கு மரியாதை செய்யும் விதமாகத் தான் என் படங்கள் இருக்கும் என்று விஜய் ஆண்டனியே கூறியிருக்கிறார்" என்று பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார்.