மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழகத்தில் பீஸ்ட் திரைப்படம் எத்தனை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது தெரியுமா... வெளியான புதிய தகவல்.!
தமிழ் சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகராக இருக்கும் தளபதி விஜய் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர் போன்ற வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் பீஸ்ட். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் பூஜா ஹெக்டே ஹீரோயினாக நடிக்கிறார்.
சமீபத்தில் அனிருத் இசையமைத்த, சிவகார்த்திகேயன் பாடல் வரிகள் எழுதிய அரபி குத்து பாடல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்நிலையில் பீஸ்ட் திரைப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இப்படத்தின் வருகைக்காக ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரான திருப்பூர் சுப்பிரமணியம் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.
அதில் விஜய் பீஸ்ட் திரைப்படம் தமிழகம் முழுவதும் 800 - 850 திரையரங்குகள் வரை வெளியாகும் என கூறியுள்ளார். மீதம் உள்ள 250 திரையரங்குகளில் KGF 2 திரைப்படம் வெளியாகும் என கூறியுள்ளார்.