மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
என்னது.. பிக்பாஸ் சீசன் 5 ல் இவங்கெல்லாம் கலந்துகிறாங்களா! கசிந்த தகவல்! செம எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி பிக்பாஸ். இந்த நிகழ்ச்சியை சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்த்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சி தமிழ், ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.
தமிழில் கமல் தொகுத்து வழங்கும் இந்த நிகழ்ச்சி இதுவரை வெற்றிகரமாக நான்கு சீசன்கள் முடிவடைந்த நிலையில், விரைவில் ஐந்தாவது சீசன் தொடங்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. கொரோனா அச்சுறுதல் காரணமாக தள்ளிசென்ற பிக்பாஸ் சீசன் 5 அக்டோபர் மாதம் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போவதாக தொடர்ந்து பல பிரபலங்களின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5வில் கலந்து கொள்ளவுள்ளதாக சில பிரபலங்களின் பெயர்கள் கசிந்துள்ளது. அதாவது குக் வித் கோமாளி கனி, சுனிதா, பாபா பாஸ்கர், ஷகீலாவின் மகள் மிலா, நடிகை ஐஸ்வர்யா, ஜிபி முத்து, நடிகர் ஜான் விஜய், ப்ரதாயினி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளதாக கூறப்படுகிறது. இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை கிளப்பியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் வெளிவரவில்லை.