பிக்பாஸ் வீட்டில் கர்ப்பமான அன்ஷிதா.. ரயான் கேட்ட கேள்வி.. வைரலாகும் வீடியோ.!
நீண்டநாள் கனவு நனவாகப் போகும் மகிழ்ச்சியில் பிக்பாஸ் பிரதீப்.. விஜய் டிவி கொடுத்த வாய்ப்பு.!
2016ம் ஆண்டு "அருவி" என்ற படத்தில் ஒரு துணை நடிகராக அறிமுகமானார் பிரதீப் ஆண்டனி. தனது நேர்த்தியான நடிப்பால் மக்களின் கவனத்தைக் கவர்ந்த இவர், தொடர்ந்து 2021ஆம் ஆண்டு அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வெளியான "வாழ்" படத்தில் ஹீரோவாக நடித்து மேலும் கவனத்தைக் கவர்ந்தார்.
2022ம் ஆண்டு கவின் நடிப்பில் வெளியான "டாடா" படத்தில் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்துள்ளார். இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதீப் மக்களின் மனம் கவர்ந்த போட்டியாளராக இருந்தார்.
இந்நிலையில் திடீரென சர்ச்சைக்குரிய வகையில் ரெட் கார்டு கொடுக்கப்பட்டு பிரதீப் வெளியேற்றப்பட்டார். விளக்கமளிக்க வாய்ப்பு தராமல் அவரை வெளியேற்றியதால் கமல் மீது மக்கள் அதிருப்தியில் உள்ளனர். வைல்ட் கார்டு போட்டியாளராக பிரதீப் மீண்டும் களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், விஜய்டிவியின் பங்குதாரரான டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பிரதீப்பிற்கு அவரது பல நாள் கனவான ஒரு வெப் சீரீஸ் இயக்கும் வாய்ப்பை தந்துள்ளதாகவும், அதற்கான ஸ்கிரிப்ட் தயாரிக்கும் பணியில் பிரதீப் உள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.