மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
வேட்டைக்கு ரெடியா?? கம்பீரமாக என்ட்ரி கொடுத்த உலகநாயகன்!! செம மாஸாக வெளிவந்த பிக்பாஸ் 6 ப்ரோமோ!!
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சிதான் பிக்பாஸ். இதன் ஐந்து சீசன்கள் வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது. இதில் முதல் சீசனில் ஆரவ், இரண்டாவது சீசனில் ரித்விகா, மூன்றாவது சீசனில் முகேன், நான்காவது சீசனில் ஆரி மற்றும் இறுதியாக நடந்து முடிந்த 5 வது சீசனில் ராஜு ஆகியோர் வெற்றி பெற்றனர்.
இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் 6வது சீசனுக்காக ரசிகர்கள் பெருமளவில் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இம்முறை சாமானிய மக்களும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சமீபகாலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளதாக பல பிரபலங்களின் பெயர்களும் அடிபட்டு வருகிறது.
இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் 2ஆம் தேதி தொடங்கவுள்ளதாக தகவல்கள் பரவி வருகிறது. மேலும் இதனையும் நடிகர் கமலே தொகுத்து வழங்கவுள்ளார். இந்த நிலையில் தற்போது பிக்பாஸ் குறித்த மிரட்டலான ப்ரமோ ஒன்று வெளியாகியுள்ளது. அதில் உலக நாயகன் கமல் கம்பீரமாக என்ட்ரி கொடுத்து வேட்டைக்கு ரெடியா என கேட்டுள்ளார். அந்த ப்ரோமோ வீடியோ வைரலாகி வருகிறது.