திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
முதல் முறையாக வெளியான பிக்பாஸ் கவினின் சிறுவயது புகைப்படம். புகைப்படம் இதோ.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரில் வேட்டையன் என்ற கதாபாத்திரம் மூலம் பிரபலமானவர் நடிகர் கவின். சீரியலை அடுத்து சினிமா பக்கம் தலைகாட்டிய இவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாத நிலையில் பிக்பாஸ் சீசன் மூன்றில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்துகொண்டார்.
போட்டியின் ஆரம்பத்தில் ஆடல், பாடல் என செம ஜாலியாக இருந்த கவின் அதன்பின்னர் லாஷ்லியாவுடன் ஏற்பட்ட காதலால் சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் போட்டியின் இறுதிவரை செல்ல வாய்ப்பு இருந்தும் பிக்பாஸ் கொடுத்த 5 லட்சத்தை பெற்றுக்கொண்டு போட்டியில் இருந்து வெளியேறினார்.
தற்போது கவின் - லாஷ்லியா இருவரும் திருமணம் செய்துகொள்வார்களா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துவருகின்றனர். மேலும், புது படம் ஒன்றில் கமிட்டாகியுள்ள கவின் பிசியாக நடித்துவருகிறார். இந்நிலையில் இவரது சிறுவயது புகைப்படம் ஓன்று இணையாயத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. இதோ அந்த புகைப்படம்.