மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பொன்னியின் செல்வன்; ஐஸ்வர்யா ராய் ரோலில் நடிக்க முதலில் செலக்ட் செய்யப்பட்டது இந்த பிரபல நடிகையா?? அட.. யார்னு பார்த்தீங்களா!!
மணிரத்னத்தின் கனவு திரைப்படம் பொன்னியின் செல்வன். கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை தழுவி எடுக்கபட்ட இப்படம் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கடுமையாக உழைத்து தற்போது இருபாகங்களாக உருவாகியுள்ளது. இப்படத்தை
லைகா புரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரிக்க, ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
பொன்னியின் செல்வன் முதல் பாகம் செப்டம்பர் 30ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் என 5 மொழிகளில் வெளியாக உள்ளது. வரலாற்று சிறப்புமிக்க இப்படத்தை காண ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் காத்திருக்கின்றனர். படத்தின் டீசர், டிரைலர்,பாடல் அடுத்தடுத்தாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பாரப்பை அதிகரிக்க வைத்துள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் நடிகை ஐஸ்வர்யா ராய் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். அதாவது நந்தினி மற்றும் அவரது ஊமை தாய் மந்தாகினி தேவியாக ஐஸ்வர்யா ராய் நடித்துள்ளார். ஆனால் 1994 மற்றும் 2011ம் ஆண்டு பொன்னியின் செல்வன் படத்தை எடுக்க இயக்குனர் மணிரத்னம் முயற்சித்த போது நந்தினி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை ரேகாவை நடிக்க வைக்க எண்ணினாராம். ஆனால் தற்போது இந்த சவாலான கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய்தான் பொருத்தமாக இருப்பார் என அவரை தேர்வு செய்ததாக பேட்டி ஒன்றில் இயக்குனர் மணிரத்னம் கூறியுள்ளார்.