மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
போண்டா மணியின் இறுதி தருணத்தில் நடந்தது என்ன?.. பதைபதைப்பு தருணத்தை விவரித்த மகன்.!
பிரபல நகைச்சுவை நடிகர் போண்டா மணி, பொழிச்சலூரில் இருக்கும் தனது வீட்டில் நேற்று இயற்கை எய்தினார். 175 க்கும் மேற்பட்ட படங்களில் நகைச்சுவை மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்த போண்டா மணி, கடந்த சில ஆண்டுகளாகவே சிறுநீரக செயலிழப்பு பிரச்சனையால் அவதிப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில், நடிகர் போண்டா மணியின் மகன் தந்தையின் மரணம் தொடர்பான தகவலை ஊடகத்திற்கு பகிர்ந்துகொண்டார். இதுகுறித்த பேட்டியில், "அப்பாவை கவனிப்பதற்காக நான் படிக்க செல்லாமல் வீட்டில் இருந்து அவரை கவனிக்கிறேன். சகோதரி மட்டுமே படித்து வருகிறார்.
நேற்று டயாலிசிஸ் சிகிச்சைக்கு சென்று வந்த பின்னரும் நன்றாகவே இருந்தார். மதியம் வரை மகிழ்ச்சியுடன் சிரித்து பேசிக்கொண்டு இருந்தார். மதியத்திற்கு மேல் உடல் நலக்குறைவுடன் காணப்பட்டார்.
இரவில் மருத்துவமனைக்கு செல்லலாம் என அழைத்து, வாசலில் இருந்து இறங்குவதற்குள் மயங்கி விழுந்தார். அவசர ஊர்தியினர் வந்து முதற்கட்ட சோதனை நடத்தியபோது, உடலில் உயிர் மட்டும் இருக்கிறது என்றார்கள். முதலுதவி சிகிச்சை அளித்தபோது இரத்த வாந்தி எடுத்தார்.
அதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிசெய்தபோது, அவரின் உயிர் வலியிலேயே பிரிந்துவிட்டதாக தெரிவித்தனர். எங்களுக்கு அரசும், திரைத்துறையினரும் ஏதேனும் உதவி செய்ய முன்வர வேண்டும்" என கூறினார்.