#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கேப்டன் மில்லர் திரைப்படத்தின் பூஜையின் போது எடுக்கப்பட்ட வைரலாகும் புகைப்படங்கள்..
சத்யஜோதி பிலிம்ஸின் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் ஆகியோர் தயாரிக்கும் படம் "கேப்டன் மில்லர்". அருண் மாதேஸ்வரன் எழுதி இயக்கும் இந்த திரைப்படத்தில் தனுஷுடன் பிரியங்கா அருள் மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், ஜான் கொக்கன் ஆகியோர் நடிக்கின்றனர்.
2018ஆம் ஆண்டிலேயே திரைக்கதை எழுதப்பட்ட படம், 2022ஆம் ஆண்டு தான் "டி 47" என்ற தற்காலிகப் பெயருடன் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து சென்னை, தென்காசி, திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது.
ஜி வி பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். இப்படம் ஒரு அதிரடி சாகசப் படமாக, பார்வையாளர்களைக் கவரும் வகையில் படமாக்கப்பட்டுள்ளது இந்நிலையில், இப்படத்தின் பூஜையின் போது எடுத்த புகைப்படங்களை தயாரிப்பு நிறுவனம் இணையத்தில் வெளியிட்டுள்ளது.
இந்த புகைப்படங்களில் தனுஷ் ஹீரோயின் பிரியங்கா அருள் மோகனுடன் பேசிக்கொண்டிருப்பது போல் உள்ளது. இதில் தனுஷ் நீண்ட தாடி, மீசையுடன் பார்க்க அழகாக இருக்கிறார். மேலும் இப்படம் வரும் டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என்பது தெரிய வந்துள்ளது.