"அய்யோ திருமணமா.?! எப்பவுமே இல்ல" பொன்னியின் செல்வன் நடிகை.. பகீர் அறிவிப்பு.!
கொஞ்சம் இவங்களையும் கவனிங்க சார்! தமிழக முதல்வருக்கு இயக்குனர் சேரன் விடுத்த வேண்டுகோள்!!
மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் பிறந்தநாள் கடந்த ஜூன் 3-ம் தேதி மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவர்கள் பல்வேறு புதிய திட்டங்களை அறிவித்தார். அதில் தேசிய அளவில் ஞானபீட, சாகித்ய அகாடமி, மாநில இலக்கிய விருதுகள் பெரும் தமிழக எழுத்தாளர்களுக்கு வீடு வழங்கப்படும் என அறிவித்திருந்தார். இதற்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கு வாழ்த்து கூறிய நடிகரும் இயக்குனருமான சேரன் தனது ட்விட்டர் பக்கத்தில், திட்டங்கள் சிறப்பு சார். எழுத்தாளர்களை கௌரவிப்பது பாராட்டுக்குரியது. அதேபோல திரைத்துறையிலும் மக்களுக்கான சமூகத்திற்கான சீர்திருத்த படங்களை உருவாக்கும் இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் இருக்கிறார்கள். அவர்களையும் கருத்தில் கொள்ளுமாறு இந்த பதிவை இடுகிறேன்.
விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்கள் வியாபாரச்சந்தையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள். படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. வியாபாரம் சாராததுதான் மக்களுக்கான கலை.. அதை கவனத்தில் கொண்டு இதை பாருங்கள்..
— Cheran (@directorcheran) June 4, 2021
விழிப்புணர்வு மற்றும் வாழ்வியல் சார்ந்த திரைப்படங்களை உருவாக்கும் கலைஞர்கள் வியாபாரச்சந்தையிலும் புறந்தள்ளப்படுகிறார்கள். படைப்புகளை மக்களிடம் கொண்டு செல்ல முடியாத நிலைதான் இருக்கிறது. வியாபாரம் சாராததுதான் மக்களுக்கான கலை.. அதை கவனத்தில் கொண்டு இதை பாருங்கள்.
மாநில விருது, தேசிய விருது பெற்ற இயக்குனர்கள், திரை எழுத்தாளர்கள் நிறைய பேர் வாழ்வியல் பிரச்சினைகளில் இருக்கிறார்கள். எல்லாத்துறைகளிலும் சிறந்தவர்களை கவனிக்கும் தாங்கள் இத்துறையின் முன்னோடிகளையும் கெளரவிக்க வேண்டும் என்பது என் தாழ்மையான வேண்டுகோள் என தெரிவித்துள்ளார்.